செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் ஏராளமானோ வாகனங்களில் செல்கின்றனர். வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள வேகத்தடைகள் வாகனங்களில் வருபவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் உள்ள வேகத்தடைகளுக்கு உரிய வண்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.