புகார் எதிரொலி

Update: 2024-09-22 12:12 GMT
  • whatsapp icon

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடையில், ஒன்றன்பின் ஒன்றாக 2 ரெயில் நிலைய பெயர் பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெயர் பலகை பயணிகள் வரும் வழியில் இருந்ததால், பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் ரெயில்வே துறை அதிகாரிகள் பெயர் பலகையை அகற்றினார். உடனடியாக நடவடிக்கை எடுத்த ரெயில்வே துறைக்கும் துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்