திருப்பூர் பழைய கோர்ட்டு ரோடு காங்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இதனால் வேலை நாட்களில் வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் வங்கி முன் உள்ள காங்கிரீட் சாலையில் வாகனங்கள் ராக்கெட் வேகத்தில் செல்கின்றன. யாரும் மிதமான வேகத்தில் செல்வதாக இல்லை. அவ்வாறு அசுர வேகத்தில் செல்பர்கள் வாகனத்துடன் கீழே விழுந்தால்.... அவர்கள் விழுவது மட்டுமல்ல அந்த சாலையில் மற்றவர்கள் மீது மோதிவிடுவார்கள் போல் உள்ளது. எனவே பழைய கோர்ட்டு ரோட்டில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.