அரியலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிட வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் உள்ள பெரும்பாலான கழிப்பிடங்களின் கதவுகள் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கழிப்பறை வளாகம் துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.