பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு என தனி கட்டிடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கட்டிடம் சிதிலம் அடைந்ததைத் தொடர்ந்து இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் உள்ள பொது அறையில் காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற நோயாளிகளுக்கு எளிதில் காச நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காச நோய் பிரிவுக்கு என தனி கட்டிடம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.