செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-09-08 12:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் தரணிஸ்கொயர், லால்பகதூர் சாஸ்த்திரி தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் அதிக அளவு செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் அங்கேயே தேங்கியுள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெரும் அளவு மக்கள் பயன்படுத்தும் பகுதி என்பதால் நோய் தொற்று ஏற்படும் முன்பு, மழைநீர் வடிகால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்