தடுப்பணை கட்டப்படுமா?

Update: 2024-09-01 11:24 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வழியாக செல்லும் நங்காஞ்சி ஆறு கரடிப்பட்டி, தடாகோவில் வழியாக சென்று தடாகோவில் அருகில் அமராவதி ஆற்றுடன் கலக்கிறது. தற்போது கரடிப்பட்டி அருகில் நங்காஞ்சி ஆற்றில் தடுப்பணை அமைத்தால் இதில் மழைக்காலங்களில் ஆற்றில் வரும் நீர் தேங்கி நின்று செல்லும். இதனால் கரடிப்பட்டி, அரவக்குறிச்சி, தடாகோவில் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதிகளில் விவசாய நிலங்கள் செழிக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கரடிப்பட்டி பகுதியில் உள்ள நங்காஞ்சி ஆற்றில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி