அரியலூர் பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலை பகுதியானது, நகரின் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது. இந்த அண்ணா சிலை ரவுண்டானாவின் கீழ் பகுதியில் யாசகம் பெறுபவர்கள் சிலர் தங்கியுள்ளனர். இதனால் இந்த சிலையை சுற்றிலும் குப்பைகளாகவும், கிழிந்த துணிகளாகவும் தொங்கிக்கொண்டு உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் இவ்வாறு சுகாதார சீர்கேடு காணப்படுவது பொதுமக்களுக்கு அசவுகரியமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து அண்ணா சிலை ரவுண்டானாவை சுத்தப்படுத்த வேண்டும்.