அரியலூர் மாவட்டம் முக்குளம் அருகே அளவேரி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சலுப்பை, ஆலத்திப்பள்ளம் மற்றும் சத்திரம் கிராமத்தில் உள்ள வடிகால்கள் மூலம் மழைநீர் வருகிறது. இந்த ஏரியின் வடிகால் மதகு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் மதகு உள்ளது. இதனால் இந்த ஏரியில் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.