மகளிர் உரிமைத்தொகை பெற முடியாமல் பெண்கள் அவதி

Update: 2024-08-11 16:35 GMT

திருச்சி சமயபுரம், இனாம் சமயபுரம், மாகாளிகுடி, வி.துறையூர் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கணக்கான பெண்கள் தங்களின் உரிமை தொகையினை சமயபுரம் அம்பலக்கார தெருவில் உள்ள தபால் நிலையத்தில் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல நாட்களாக இந்த தபால் நிலையத்தில் உள்ள சர்வர் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் அங்கு கணக்கு வைத்துள்ள பெண்கள் தங்களின் உரிமைத்தொகையினை பெற முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பல பெண்கள் இந்த தொகையினை நம்பியே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் வந்த மகளிர் உதவித் தொகையினை கூட பெற முடியாத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்