வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-08-11 11:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் கிராமம், கணபதி நகர் பகுதியில் உள்ள சாலையின் 2 பகுதியிலும் மரம், செடி மற்றும் கொடி அடர்ந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர். மேலும், அந்த பகுதியில் அதிக அளவு விசப்பூச்சுகளும் இருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் அருகில் உள்ள மரம், செடி மற்றும் கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி