நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

Update: 2024-08-11 11:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் உள்ள குப்பைகள் நரசங்குப்பம் பகுதியில் உள்ள ஏரி அருகில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து கடந்து ஒரு வருடங்களுக்கு மேலாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும எடுக்காமல், மெத்தன்பபோக்கை கடைபிடிக்கின்றனர். எனவே, ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி