செங்கல்பட்டு மாவட்டம், திருத்தேரி கிராமம், குப்பைகாரி அம்மன் கோவில் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த தெருவில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த தெருவை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும், இந்த பகுதியில் அரசு பள்ளி உள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவியர்களை தெருநாய்கள் கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.