பட்டுப்போன மரம்

Update: 2024-07-28 14:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சியை சேர்ந்த பொற்பனைகோட்டை முனீஸ்வரர் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதனால் அதிக பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவார்கள். இந்த நிலையில் இந்த கோவில் வாசலில் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. பக்தர்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்