செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஆதனூர் நோக்கி செல்லும் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த மேம்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.