செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-28 10:45 GMT

கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நடையனூர் பகுதியில் தார் சாலை ஓட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைப்பள்ளி சுவற்றையொட்டி உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த உபரி நீர் கால்வாய் வழியாக விவசாய தோட்டங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் சென்று கோம்புப்பாளையம் பகுதி வழியாக செல்லும் புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் உபரிநீர் வாய்க்காலில் நெடுகிலும் சம்பு, செடி, கொடிகள் என ஏராளமான செடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக மழைக்காலங்களிலும் மற்ற நாட்களிலும் தண்ணீர் தங்கு தடை இன்றி செல்ல முடியாமல் தேங்கிநிற்கின்றன. மேலும் பள்ளியின் பின்புறம் உள்ள உபரி நீர் கால்வாயில் ஏராளமான செடி கொடிகள் ஆள் உயரம் முளைத்து உள்ளதால் அந்த செடி, கொடிகளில் ஏராளமான கொசுக்கள் தங்கி உற்பத்தியாகி வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்