திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அப்பநல்லூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் சில நேரங்களில் இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் இருப்பது இல்லை. இதனால் அந்த நேரத்தில் வரும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.