பாதியில் நிற்கும் சுகாதார வளாக பணி

Update: 2024-07-21 11:34 GMT

கரூர் மாவட்டம் சேமங்கி பெரியார் நகரில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர். பெரியார் நகர் பகுதி மிகவும் குறுகிய பகுதியாக இருப்பதால் அதிக அளவு வீடுகள் மட்டுமே உள்ளது. அதுவும் இடம் இன்றி உள்ளது. இதன் காரணமாக பெரியார் நகருக்குள் சுகாதார வளாகம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெரியார் நகர் பகுதிக்கு எதிர்ப்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் நலன் கருதி கழிவறை கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கழிவறை சிதிலமடைந்து இடிந்துவிட்டது. இதைத்தொடர்ந்து காகித ஆலை சார்பில் அந்த பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டுவதற்காக அஸ்திவாரம் போடப்பட்டு கட்டிடம் கட்டும்பணி தொடங்கியது. இந்நிலையில் இந்தப் பணி பாதியிலேயே நின்று விட்டது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்