செங்கல்பட்டு மாவட்டம், கன்னிவாக்கம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடையை மாத்தில் 6 நாட்கள் மட்டும் திறக்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை சரியாக விநியோம் செய்வதும் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். மாதம் தோறும் அந்த பகுதி மக்கள் அனைவரும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரேஷன் கடையை மாதம் 12 நாட்கள் திறக்கவும், அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.