செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே நீண்ட நாட்களாக குட்டை போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பள்ளிக்கு அருகில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
