செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ராதா நகரில் மழைநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் அதிக அளவு குப்பைகள் அடைத்து மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் உள்ளது. எனவே, அந்த பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.