தஞ்சையை அடுத்த குருங்குளம் அருகே சமத்துவபுரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. கூட்டம், கூட்டமாக அந்த பகுதியில் உள்ள மரங்களில் ஏறி பழங்கள், காய்களை பறித்து வீசுகின்றன. வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்கள், செல்போன்கள் போன்றவற்றை தூக்கி செல்கின்றன. சாலையில் நடந்து செல்பவர்கள், குழந்தைகளை குரங்குகள் கடிக்க பாய்கின்றன. அட்டகாசம் செய்து வரும் குரங்குகளால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?