சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதிகளின் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?