தாமதமாகும் கட்டுமான பணி

Update: 2024-06-16 11:31 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் அதே நேரத்தில் நடைபெற்றது. ஆனால் ஶ்ரீமுஷ்ணம் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியர் அலுவலம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கட்டுமான பணியை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்