கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள கவுண்டன்புதூரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி செயல்பட்டது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்த நிலையில் ஆசிரியர்களின் கவனக்குறைவு காரணமாக படிப்படியாக இப்பள்ளியில் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. மிகவும் குறைவான எண்ணிக்கையில் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்ததன் காரணமாக இந்த பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு மூடியுள்ள தொடக்கப்பள்ளியை மீண்டும் திறந்து செல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.