பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-02 14:12 GMT

கரூர் மாவட்டம், கோம்புப்பாளையத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக கோம்புப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் சென்று வருகின்றனர். அதேபோல் ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு இடுபொருட்களையும், விளைந்த விளைபொருட்களையும் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் பாலத்தில் தடுப்புச் சுவர் உடைந்த நிலையில் உள்ளது. எனவே விபத்துக்கள் ஏற்படாத வகையில் உடைந்த பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்