அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் ஆலமரத்தடி பகுதியில் ஏந்தல் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இந்த ஏரியின் அருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளதால் மதுப்பிரியர்கள் இங்கே மது வாங்கி வந்து குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி சொல்கின்றனர். அதனால் இந்த ஏரியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.