பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி வெள்ளாளற்றில் கலக்கும் சின்னாறு சீமை கருவேல மரங்கள் மற்றும் முட் செடிகளால் ஆக்கிரமித்து காணப்படுகிறது. மேலும் இந்த ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த சின்னாறு பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் மிக மோசமான நிலையில் சின்னாறு உள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு உரிய நிதி ஒதுக்கி சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.