நொய்யல் அருகே முத்தனூர் புகளூர் வாய்க்காலின் குறுக்கே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்தும், துணிகளை துவைத்தும் வந்தனர். தற்போது அந்த பாலம் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக கடந்த சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து விட்டனர். ஆனால் அதற்கு பதிலாக இதுவரை புதிய பாலம் கட்டப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.