செல்லிக்குட்டை குளம் தூர் வாரப்படுமா?

Update: 2024-05-26 11:43 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள பகுதியில் செல்லிக்குட்டை குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் சுடுகாடு அமைந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்தவர்கள் இந்த செல்லிக்குட்டை குளத்தில் குளித்து விட்டு பின்னர் வீடுகளுக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது இந்த செல்லிக்குட்டை குளம் தூர் வாரப்படாமலும், இந்த குளத்திற்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இந்த குளத்திற்கு செல்ல வழி இல்லாமல் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்