சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2024-05-26 10:28 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் செட்டி மண்டபம் பகுதியில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பெண்கள், சிறுவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

மயான வசதி