சிதம்பரம் காந்திசிலை பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்ட விரட்டுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.