திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட தாசார்புரம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த பகுதியில் கருமகாரிய கொட்டகை அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.