பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம் தெப்பகுளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்தால் பெரம்பலூர் பெரியஏரியில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால் வழியாக வந்து தெப்பகுளம் நிரம்பி வழியும். இந்தநிலையில் வரத்து வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் ஆங்காங்கே செடி, செடிகள் முளைத்து முட்புதர்கள்போல் காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தும் தண்ணீர் தெப்பகுளத்திற்கு செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.