உப்பிலியபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே ரூ.10 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் சறுக்கு பலகை, ஊஞ்சல் சிறுவர்கள் விளையாடும் சூழ்நிலைகளுடன் இருந்தது. இந்தநிலையில் பூங்கா பயன்பாடு இல்லாமல் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.