செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் ஆதிநகர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நாய்கள் வாகனங்களில் செல்வோரை கடிக்க துரத்துவதால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தெருவில் அலைந்து திரியும் தெருநாய்களை பிடித்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.