அரியலூர் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்காக அரசு நீச்சல் குளம் கட்டியது. இந்த நீச்சல் குளம் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த நீச்சல் குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.