பாலூர் அருகே அ.குச்சிப்பாளையம்-வானமாதேவி இடையே உள்ள கெடிலம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் பாலத்தில் ஆங்காங்கே மரங்கள் வளர்ந்து வருகிறது. இந்த மரத்தின் வேர்கள், கட்டிடத்தின் உள்ளே ஊடுருவி செல்வதால், தற்போது பாலம் மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பாலத்தை சீரமைப்பதோடு, அதில் வளர்ந்து வரும் மரங்களை அகற்ற வேண்டும்.