மாணவர் விடுதி எப்போது கட்டப்படும்

Update: 2024-03-31 17:21 GMT
சேத்தியாத்தோப்பில் சேதமடைந்து காணப்பட்ட மாணவர் விடுதி கட்டிடம் அகற்றப்பட்டது. அதற்கு பதில் புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அங்கு மேற்கொண்டு பணிகள் நடைபெறவில்லை. இதனிடையே தற்காலிகமாக மாணவர் விடுதி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அங்கு போதிய இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி