அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இந்த பகுதியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்100 சதவீதம் வாக்களிப்போம், ஜனநாயகத்தை காப்போம் என்ற பதாகை பார்வைக்கு வைக்காமல் மறைத்து வைக்க பட்டுள்ளது. இதனால் இந்த விளம்பர பதாகை வைத்தும் பயன் இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.