ஏரியை பாதுகாக்க வேண்டும்

Update: 2024-03-03 11:46 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை ஆலமரத்தடி பகுதியில் ஏந்தல் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இந்த ஏரியின் அருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளதால் மதுப்பிரியர்கள் இங்கே மது வாங்கி வந்து குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி சொல்கின்றனர். அதனால் இந்த ஏரியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் ஏரியை முறையாக தூர்வாராததால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்