தபால் பெட்டி சேதம்

Update: 2024-02-18 13:47 GMT

சென்னை, சேப்பாக்கம் எழிலகம் பின்புறத்தில் தபால் பெட்டி ஒன்று உள்ளது. இந்த தபால் பெட்டி சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, அப்பகுதி பொதுமக்கள் தபால் அனுப்புவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், தபால் பெட்டி சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தபால் பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்