அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து ஸ்ரீபுரந்தான் வரை சாலையின் இரு பக்கங்களிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அரசின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் தண்ணீர் இல்லாமல் மரக்கன்றுகள் கருகத் துவங்கி உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.