குறிஞ்சிப்பாடி ஒன்றியம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள இ சேவை மையம் பராமரிப்பின்றி உள்ளது. இதனை மதுபிரியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அங்கு மதுகுடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.