தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-04 14:02 GMT

அரியலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை குரைத்துக்கொண்டே கடிக்க பாய்கிறது. இதனால் இந்த வழியை பயன்படுத்துவதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பயப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்