செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-04 12:56 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள திருவுடையார்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து வெள்ளாற்றில் நீராடி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்ற போது தண்ணீர் பரப்பு முழுவதும் வெளியே தெரியாத அளவிற்கு செடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி