மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீர்த்தேக்கத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி கரைகளில் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கிறது. இவைகள், பெரிதாக வளர்ந்தால் கரைக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் கரையில் உள்ள சாலையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் இதனால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.