செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பிடம் ஒரு வருடத்திற்கு மேலாக பூட்டிய நிலையில் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இங்கு கழிப்பிடம் இல்லாத நிலையில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பூட்டிய நிலையில் உள்ள கழிப்பறையை திறக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.