செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர் முடிச்சூர் சாலையில் கடந்த 10 வருடங்களாக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் பின்புறத்தில் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இதனால், மானவ-மாணவியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், முக்கிய சாலையின் அருகில் இருப்பதால் அடிக்கடி விபத்தும், சாலையில் செல்லும் பயணிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.