குழந்தைகள் மையம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-21 13:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வையாவூர் ஊராட்சி கொலம்பாக்கம் பகுதியில் குழந்தைகள் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த குழந்தைகள் மையம் செயல்படும் கட்டிடமானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு செல்லும் குழந்தைகளின் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பல முறை பஞ்சாயத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் குழந்தைகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க, குழந்தைகள் மையத்தினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி